உங்கள் ஓட்டு கதிரவனுக்கு பாடல் வரிகள்

Movie Name
Makkal Aanaiyittal (1988) (மக்கள் ஆணையிட்டால்)
Music
S. A. Rajkumar
Year
1988
Singers
Malasiya Vasudevan
Lyrics
S. A. Rajkumar
உங்கள் ஓட்டு கதிரவனுக்கு எங்கள் ஓட்டு கதிரவனுக்கு
நாட்டு நடப்ப பாத்து போடுங்கம்மா ஓட்டு....

ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ
அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு
ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ
அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு

ஏற எறங்க பாத்து எடைகளை கொஞ்சம் போடு நீ
எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகளை போடு
ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ
அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு

ஓட்டுக்கு உன்னிடத்தில் வருபவன் யாரு
உழைப்பவனா ஊரை ஏய்ப்பவனா
தேர்தல் களத்தினிலே நிற்பவன் யாரு
தியாகம் செஞ்சவனா மோசம் செஞ்சவனா

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொழுத்தர்கள நம்பாதப்பா
நாட்டுக்கு உயிர் கொடுக்கும் நல்லவர தள்ளாதப்பா
லஞ்ச பேய்கள வெரட்டணுமே
ஏழை துன்பம் தீர்ப்பவன் ஜெயிக்கணுமே அதுக்கு

ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ
அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு..பாரப்பா

கொள்கையே இல்லாத கொடியவன் யாரு
கொடுமைக்கு பணியா வீரனும் யாரு
ஊழல் புரிஞ்சு வாழும் மனுஷனும் யாரு
அதை ஊருக்கு சொல்லும் உயர்ந்தவன் யாரு

உறவுக்கு கரம் கொடுப்பான் உங்க வீட்டு தம்பியப்பா
உரிமைக்கு குரல் கொடுப்பான் தென்பாண்டி சிங்கமப்பா
உதயக் கதிரும் தான் உதிக்குது பாரு
உடன் பிறப்பே நீ ஒன்றாக சேரு...ஹேய்.....

ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ
அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு
ஏற எறங்க பாத்து எடைகளை கொஞ்சம் போடு நீ
எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகளை போடு

ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ
அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.