தாலாட்டு நாள் உந்தன் பாடல் வரிகள்

Last Updated: Jul 16, 2026

Movie Name
Thambi (2019) (தம்பி)
Music
Govind Vasantha
Year
2019
Singers
Crishna
Lyrics
Vivek (lyricist)
கை பையில் சந்தோசம்
காத்தோட பூ வீசும்
வண்ணத்து தாளுக்குள் அன்பாகுறோம்

பூமிக்கு வேணும்முன்னு
விண் தாவும் மீன் ஒன்னு
வந்தாளே இந்நாளே கொண்டாடுறோம்

எந்த சோகங்கள் வந்தாலும்
நான் உன்னை சுத்தி
இருப்பேன் தடுப்பேன் நீ பூத்திட
எந்த சாமிக்கு முன்னாலும்
நான் கேட்பதெல்லாம்
சிரிச்சு செழிச்சி நீ வாழ்ந்திட

தாலாட்டு நாள் உந்தன்
தாலாட்டு நாள் இங்கு
தாலாட்டு நாள் உன்னை
பாராட்டும் நாள் அந்த
மேகங்கள் தேன் சொட்ட
காற்றெல்லாம் கை தட்ட
பூமிக்கு நீ வந்த
தாலாட்டு நாள் கூறுவேன்

நாம் வாழ்க்கையே மண் சேரவே
நாம் பெற்ற கடன்தானே
அதை தீர்க்கவே எல்லோரிடம்
சிரிப்பூட்டி நகர்ந்தோம்
வாழ்வில் நீ இன்று காண்பிக்கும் பாசங்கள்
வேறேல்லாமே வேண்டாத வேஷங்கள்

விழாவோ கனாவோ
விழாத வினாவோ
உன் கைகள் மேலே நின்று
தோள் சாய்க்கும் நேசங்கள்

தாலாட்டு நாள் உந்தன்
தாலாட்டு நாள் இங்கு
தாலாட்டு நாள் உன்னை
பாராட்டும் நாள் அந்த
மேகங்கள் தேன் சொட்ட
காற்றெல்லாம் கை தட்ட
பூமிக்கு நீ வந்த
தாலாட்டு நாள் கூறுவேன்