ஆப்பிள் பெண்ணே நீ யாரோ பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Roja Kootam (2002) (ரோஜா கூட்டம்)
Music
Bharathwaj
Year
2002
Singers
Srinivas
Lyrics
Viveka
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
(ஆப்பிள்..)

பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
என்ன நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி
பென்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி

எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி

மின்னல் கண்டு கண்களை மூடி கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை
அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொடமாட்டேன்
ஆகாயத்தின் மறு பக்கம் சென்றால் கூட விடமாட்டேன்
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்
(எங்கோ..)
(ஆப்பிள்..)

பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையினாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் ததால் ஓகே என்று சொல்வாயா
ஆமாம் என்று சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.