நல்லதோர் வீணைசெய்தே பாடல் வரிகள்

Movie Name
Bharathi (2000) (பாரதி)
Music
Ilaiyaraaja
Year
2000
Singers
Ilaiyaraaja, Mano
Lyrics
Bharathiar
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி , சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி ! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?

விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவம்எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன், இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ?

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.