மயில் போல பொண்ணு பாடல் வரிகள்

Movie Name
Bharathi (2000) (பாரதி)
Music
Ilaiyaraaja
Year
2000
Singers
Bhavatharani
Lyrics
Bharathiar
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல!

மயில் போல பொண்ணு ஒன்னு
பொண்ணு ஒன்னு.....


வண்டியில வண்ண மயில் நீயும் போன
சக்கரமா என் மனசு சுத்துதடி
மந்தார மல்லி மரிகொழுந்து செண்பகமே!

முனை முறியாப் பூவே என முறிச்சதேனடியோ?
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
பொண்ணு ஒன்னு.... 


வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்
மல்லிகப் பூப்பந்தலோட வந்தது யாரு?

சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி
வெச்சேன்
ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன

குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே
முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா?

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல!

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.