போன போக்கில் பாடல் வரிகள்

Movie Name
Adhe Kangal (2017) (அதே கண்கள்)
Music
M. Ghibran
Year
2017
Singers
Namratha S. Aravindan, Anudeep Dev
Lyrics
Parvathy
போன போக்கில்
சொல்லும் சின்ன வார்த்தையே
சில்லென இருக்கு கேளு
உண்மையே

இன்னும் சீனி
சேர்த்து பேசினாய் இதோ
சட்டென அசந்து போகும்
பெண்மையே

நானுமே நானவா
இல்லை எம்பி எம்பி மேகம்
தீண்டவா

ஏகமாய் ஏங்கவா
இன்னும் இன்னும் பேச
வார்த்தை தேட வா

தேடியே ஆசையை
மாலையாய் சூடியே நாள்
எல்லாம் உன்னையே சுற்றவா

போன போக்கில்
சொல்லும் சின்ன வார்த்தையே
சில்லென இருக்கு கேளு
உண்மையே

இன்னும் சீனி சேர்த்து
பேசினாய் இதோ சட்டென
அசந்து போகும் ஆண்மையே

மெல்ல சொல்லவா
வேகம் கூட்டவா சொல்லி
செல்லவா இல்லை நிற்கவா

சொன்ன காதலை
கிள்ளி பார்க்கவா ரெண்டு
கையிலே அள்ளி தோற்கவா

பார்வையில் ஆயிரம்
மாற்றம் வரும் என்று நான்
இன்று தான் கண்டு
கொள்கிறேன்

காதலை கூறிடும்
உன் கண்ணின் வழி
என்னையே காண்கிறேன்
நான்

சாரை சாரையாய்
தாரை தாரையாய் அன்பு
தேக்கியே உன்னை
பார்கிறேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்த சொற்களை காதின்
வாயிலே கொண்டு சேர்க்கிறேன்

தூறலை ஏந்திட கை
நீட்டினேன் தூறலாய் மட்டுமே
தூவி நின்றதே

இன்று என் உள்ளமே
நனைக்கும் வரை பெய்திடும்
வான்மழை நீ

போன போக்கில்
சொல்லும் சின்ன வார்த்தையே
சில்லென இருக்கு கேளு
உண்மையே

இன்னும் சீனி சேர்த்து
பேசினாய் இதோ சட்டென
அசந்து போகும் பெண்மையே

நானுமே நானவா
இல்லை எம்பி எம்பி மேகம்
தீண்டவா

ஏகமாய் ஏங்கவா
இன்னும் இன்னும் பேச
வார்த்தை தேட வா

பக்கத்தில் வந்ததும்
மூச்சிலே வாசனை மையமாய்
மையலாய் கொட்டுதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.