இது கதையா கவிதையா பாடல் வரிகள்

Movie Name
Chennai 600028 II (2016) (சென்னை 600028 2)
Music
Yuvan Shankar Raja
Year
2016
Singers
Kharesma Ravichandran, Sean Roldan
Lyrics
இது கதையா
கவிதையா காதலிலே
தொடர்கதையா விடுகதையா
வாழ்க்கையிலே சொல்
ஆருயிரே

பிரிந்தாலும்
பிரியவில்லை நினைவுகளாய்
தொடுவானம் தொடு விழுந்தாலும்
எழு காதலிலே

திசை இல்லை
வழி இல்லை யார்
சொன்னது நீ நினைப்பது
போல்தான் வாழ்க்கை
உள்ளது

சொந்தம் இல்லை
பந்தம் இல்லை யார்
சொன்னது உன் காதல்
மட்டும் வாழ்க்கை இல்லை
காலம் சொன்னது

இன்பம் இல்லை
துன்பம் இல்லை யார்
சொன்னது உன் வாழ்க்கை
கூறும் பாடம் இங்கே
சொல்லி தந்தது

புத்தம் புது
வாழ்க்கை வழி சொல்லுது
வழி சொல்லுது

வானவில்லா
வளையுதே நம் பயணம்
இது கனவா இது நிஜமா
துடிப்பதிங்கே சொல் யார்
அறிவார்

நட்பு என்னும்
உலகத்திலே பிரிவேது
திசை மாறும் நதி கடல்
சேரும் விதி நண்பர்களே

இது ஒரு புதுவித
அனுபவமே கதவுகள்
மீண்டும் திறந்திடுமே

இரவுகள் தாண்டி
விடிந்திடுமே உன்
இளமையின் தவறுகள்
புரிந்திடுமே

திசைகளை அறியும்
பறவைகளே தன் விழிகளை
மூடி பறக்காதே

காதலும் நட்பும்
மாறாதே அது மாறாதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.