நீ கிடைத்தாய் ஒரு முன்னை பாடல் வரிகள்

Movie Name
Chennai 600028 II (2016) (சென்னை 600028 2)
Music
Yuvan Shankar Raja
Year
2016
Singers
Chinmayi, Haricharan
Lyrics
நீ கிடைத்தாய்
ஒரு முன்னை தவம்
போலே இளம் கன்னி
பிறப்பாலே இது உந்தன்
அன்பாலே இந்நாளே
பொன்னாலே

என் நினைவோ
தினம் உன்னை சுற்றும்
நானே மனம் எல்லாம்
சுகம்தானே எங்கும்
உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்

விடுதலை ஆன
மனம் அடிமை என்றாவதென்ன
முடிவின்றி போவதென்ன
முன்னும் பின்னும்
எண்ணமின்றி தடுமாற

படித்த போதே
இணைந்த உயிரானோம்
பதவி ஏற்றோம் உண்மை
இதுதான்

மனமெல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும்
காவேரி விழியெல்லாம்
வண்ணம் பூசி விளையாடிடுதே

மனமெல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும்
காவேரி மேலேறி ஓடாதோ
இங்கும் அங்கும் எங்கும்
பொங்கி பாயாதோ ஓ

என் நினைவோ
தினம் உன்னை சுற்றும்
நானே மனம் எல்லாம்
சுகம்தானே எங்கும்
உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்
ஹேய் யே

எங்கே போனாலும்
உன்னுடைய எண்ணம்
இல்லாமல் என்னிடத்தில்
சொல்லாமலே என் இதயம்
நின்றே போகும்

அன்புடைய
ஆதிக்கமே என்றும்
என்னை பாதிக்குமே
அற்புதங்கள் சாதிக்குமே
வாழும் வரை நீடிக்குமே
நீங்காதே

எனது ஜீவன்
எனது ஆதாரம் எனது
சுவாசம் உந்தன்
கண்ணோரம்

நீ கிடைத்தாய்
ஒரு முன்னை தவம்
போலே இளம் கன்னி
பிறப்பாலே இது உந்தன்
அன்பாலே இந்நாளே
பொன்னாலே

என் நினைவோ
தினம் உன்னை சுற்றும்
நானே மனம் எல்லாம்
சுகம்தானே எங்கும்
உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்

மனமெல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும்
காவேரி மேலேறி ஓடாதோ
இங்கும் அங்கும் எங்கும்
பொங்கி பாயாதோ ஓ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.