பேசக் கூடாது பாடல் வரிகள்

Movie Name
Adutha Varisu (1983) (அடுத்த வாரிசு)
Music
Ilaiyaraaja
Year
1983
Singers
P. Susheela, S. P. Balasubramaniam
Lyrics
Panchu Arunachalam
பேசக் கூடாது 
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது மணமாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
ஆசை கூடாது

பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ

காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ
பாலில் ஆடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ

இழையோடு கனியாட தடை போட்டால் நியாயமா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேல் ஏனிந்த எல்லை

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

பேசக் கூடாது ஹங்..... 

ரராரரா லலாலலா
ரராரரா லாலாலலா..லா
ரராரரா லலாலலா
ரராரரா லாலாலலா..

காலைப் பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ

ஊஞ்சலாடும் பருவம் உண்டு
உரிமை தரவேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்

பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

ஸ்...பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

லால லாலா லா......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.