என்றென்றும் ஆனந்தமே பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Kadal Meengal (1981) (கடல் மீன்கள்)
Music
Ilaiyaraaja
Year
1981
Singers
Malaysia Vasudevan
Lyrics
Panchu Arunachalam
என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு
என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே
ப பப்ப ப பப்ப ப

மஞ்சள் நிற பூவெடுத்து மங்கை உடல் சீர் கொடுத்து
கொஞ்சி வரும் பாட்டெடுத்து வந்த சுகமே
மஞ்சள் நிற பூவெடுத்து மங்கை உடல் சீர் கொடுத்து
கொஞ்சி வரும் பாட்டெடுத்து வந்த சுகமே
சொல்ல சொல்ல நெஞ்சை அள்ளும் காவியம் பிறக்கும்
கொள்ளை கொள்ளும் வண்ணம் இன்ப ராகம் பிறக்கும்
இசை மழை பொழிந்தது குயிலே அழகே வருவாய் அருகே ஹே
என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு
என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே

தங்கச்சிலை நீ சிரிக்க தாகம் கொண்டு நான் இருக்க
ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க எண்ணம் இல்லையோ
தங்கச்சிலை நீ சிரிக்க தாகம் கொண்டு நான் இருக்க
ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க எண்ணம் இல்லையோ
தொட்டு தொட்டு மன்மதனின் லீலை அறிவோம்
பொட்டவிழுந்து வாசம் தரும் பூக்களை ரசிப்போம்
அணைப்பதில் கிடைப்பது பெருமை வருவாய் தருவாய் சுகமே
என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு
என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.