ஆசை நூறு வகை பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Adutha Varisu (1983) (அடுத்த வாரிசு)
Music
Ilaiyaraaja
Year
1983
Singers
Malaysia Vasudevan
Lyrics
Panchu Arunachalam
ஆசை நூறு வகை.... வாழ்வில் நூறு சுவை வா.....
போதும் போதுமென.... போதை தீரும் வரை வா....
தினம் ஆடிப்... பாடலாம்..... பல ஜோடி... சேரலாம்...
மனம் போல்... வா... கொண்டாடலாம்....

என்ன சுகம் தேவை.... எந்த விதம் தேவை...
சொல்லித்தர நான் உண்டு...
பள்ளியிலே கொஞ்சம்... பஞ்சனையில் கொஞ்சம்...
அள்ளித்தர நீயுண்டு...
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும்...
சொந்தம் கண்ணில் வரும் வா....
தினம் நீயே செண்டாகவே...
அங்கு நான்தான் வண்டாகுவேன்...


முத்து நகை போலே... சுற்றி வரும் பெண்கள்...
முத்தமழை தேனாக...
வந்த வரை லாபம்.... கொண்ட வரை மோகம்...
உள்ளவரை நீயாடு...
இங்கு பெண்கள் நாலுவகை.... இன்பம் நூறு வகை வா....
தினம் நீயே செண்டாகவே...
அங்கு நான்தான் வண்டாகுவேன்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.