வஞ்சி பொண்ணு பாடல் வரிகள்

Movie Name
Chandralekha (1995) (சந்திரலேக்கா)
Music
Ilaiyaraaja
Year
1995
Singers
K. S. Chithra
Lyrics
Panchu Arunachalam
வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும் குஞ்சரம் குஞ்சரம்
நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும் சஞ்சலம் சஞ்சலம்

குஞ்சரத்த பாத்தீங்களா சஞ்சலத்த தீர்தீகளா

பாத்தீங்களா தீர்தீகளா மாமா மாமா மாமா ஹா

வரனென்று வந்தவரே மரத்துமேலே பரண் ஒன்று பாத்தீகளா

மயில் இறகொன்று வாங்கி வந்து எனக்கொண்டு பரனின்று சேர்பீகளா
சிறு பொண்ணுதான் எனக்கு ஆசைகள நிறைவேற்றி வைப்பீகளா
தெரியாத விஷயங்கள மேல வந்து சரியாக சொல்வீங்களா
காட்டுக்குள்ளே உள்ளதெல்லாம் காட்டி வைக்க மாட்டீகளா
வார்த்தைகள சேர்ப்பீகளா எயப்பீகளா மாமா

மாமா மாமா
வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும் குஞ்சரம் குஞ்சரம்
நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும் சஞ்சலம் சஞ்சலம்

வாய் கூசும் புளியம்பழம் இன்னிக்கென்ன இனிப்பாக மாறிப்போச்சு

மெதுவாக பச்சக்கிளி காதில் வந்து வெவரத்த கூறிப்போச்சு
காத்தாடும் கானகத்தில் மச்சான் மனசு சூடெல்லாம் ஆறிப்போச்சு
வாய் பேச கூலி கேட்கும் மச்சான் இங்க விலைவாசி ஏறிப்போச்சு
மனசுக்குள்ள அழுக்கு துணி வெளியெடுத்து வெளுப்பீகளா
பொத்தி பொத்தி தேயப்பீகளா எய்ப்பீகளா மாமா

மாமா மாமா
வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும் குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும் சஞ்சலம் சஞ்சலம்
குஞ்சரத்த பாத்தீங்களா சஞ்சலத்த தீர்தீகளா
குஞ்சரத்த பாத்தீங்களா சஞ்சலத்த தீர்தீகளா
பாத்தீங்களா தீர்தீகளா மாமா மாமா மாமா ஹா

வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும் குஞ்சரம் குஞ்சரம்
பிஞ்சு நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும் சஞ்சலம் சஞ்சலம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.