மானோடு பாதையிலே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Kavikkuyil (1977) (கவிக்குயில்)
Music
Ilaiyaraaja
Year
1977
Singers
Lyrics
Panchu Arunachalam
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்

கன்னங் கருத்த கட்டழகா கரு நாவல் போல் கண்ணழகா
கற்கண்டு போலே சொல்லழகா ஆ ஆ சொல்லழகா
ஆவாரம் காட்டுக்குள்ளே ஒரு ஆதாயம் தேடி வந்தேன்
முத்தாடும் பெண்ணைக் கொண்டாடு அங்கே சொல்வேன் இன்பம் ஓராயிரம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்

ஆளான பொண்ணு நாளாக ஆக பாலாடை மேனி தேமல் உண்டாக
ஆளான பொண்ணு நாளாக ஆக பாலாடை மேனி தேமல் உண்டாக
ஏக்கத்தில் ஓடும் அத்தனைத் தேடும் நெஞ்சோடு அள்ளிக் கொண்டாலே தீரும்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்

தேன் ஓடும் பூவில் நீராட வேண்டும் சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தேன் ஓடும் பூவில் நீராட வேண்டும் சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தாளத்தைப் போடு ராகத்தைப் பாடு சந்தோஷமாக பொன் ஊஞ்சல் ஆடு
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பொன் ஊஞ்சல் ஆடு
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
இன்பம் இங்கே ஓராயிரம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.