அம்மாடி தூக்கமா பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Kanni Thaai (1965) (கன்னித்தாய்)
Music
K. V. Mahadevan
Year
1965
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Panchu Arunachalam
அம்மாடி தூக்கமா..
ஆமாமா கேக்கணுமா...
ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா இந்த
ஏக்கத்திலே படுத்திருந்த
தூக்கமும் வருமா உம்... 
அம்மாடி தூக்கமா..
ஆமாமா கேக்கணுமா...
ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா இந்த
ஏக்கத்திலே படுத்திருந்த
தூக்கமும் வருமா உம்...

நேத்து வந்தது நெனப்பு
அதை நெனைக்க நெனைக்க இனிப்பு
அது காத்தடிக்கிற வேளையிலே
கனிந்தது யார் பொறுப்பு
பார்த்து நின்னது வயசு -
கொஞ்சம் பழகச் சொன்னது மனசு
ஆனா பயமிருக்குது காரணம்
இந்த பாடம் எனக்கு புதுசு...
காதல் எனக்கு புதுசு..
அம்மாடி தூக்கமா..
ஆமாமா கேக்கணுமா...
ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா இந்த
ஏக்கத்திலே படுத்திருந்த
தூக்கமும் வருமா உம்...

விடிய விடிய வீசு -
உன் விழியை எடுத்து வீசு
உன் கைகளில் நான் குடியிருந்தால்
உலகம் எனக்கு தூசு
நாலு பேரை அழைப்பேன் -
மண மாலை ஒன்றை தொடுப்பேன்
இந்த நாட்டுப் பெண்ணை அருகில்
வைத்தது நாடகத்தை நடிப்பேன்...
காதல் நாடகத்தை நடிப்பேன்.. 
அம்மாடி தூக்கமா..
ஆமாமா கேக்கணுமா...
ஒரு துணையிருக்கற நேரத்திலே
தூக்கமும் வருமா இந்த
ஏக்கத்திலே படுத்திருந்த
தூக்கமும் வருமா உம்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.