மேகம் கருக்குது பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Anandha Ragam (1982) (ஆனந்த ராகம்)
Music
Ilaiyaraaja
Year
1982
Singers
K. J. Yesudas, S. Janaki
Lyrics
Panchu Arunachalam
மாமரச்சோலையில் பூமழை தேடுது
மழை மேகம் வர வேண்டும்
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து

ஏன் நிறுத்திட்டீங்க பாட்டு நல்லா இருக்கு
இன்னொரு தடவப் பாடுங்களேன்

அது அதுவந்து 
இந்தப் பாட்டு எதுக்கு உங்களுக்கு 

பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு
கேக்கணும் போல ஆசையாயிருக்கு
அட பாடுங்கன்னா


மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

காத்து மழைக் காத்து 
மேகம் கருக்குது மழை வர பார்க்குது 
வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து 
ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து


தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து

ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னென்னமோ ஆகிப் போச்சு

சேராமல் தீராது
வாடக் குளிரில் வாடுது மனசு

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து


பூவுக்குள்ள 

வாசம் வச்சான்

பாலுக்குள்ள 

நெய்யை வச்சான்

பூவுக்குள்ள 

வாசம் வச்சான்

பாலுக்குள்ள 

நெய்யை வச்சான்
கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு

கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு
பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..

நீராடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து 

காத்து மழைக் காத்து

காத்து மழைக் காத்து

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.