அடி ராக்காயி மூக்காயி பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Annakili (1976) (அன்னக்கிளி)
Music
Ilaiyaraaja
Year
1976
Singers
S. Janaki
Lyrics
Panchu Arunachalam
அடி ராக்காயி மூக்காயி குப்பாயி
செவப்பாயி கஸ்தூரி மீனாக்‌ஷி
தங்கப்பல் கரையா
தங்கமகளுக்கும் வாத்யாரையாவுக்கும்
தை மாசம் கல்யாணம் நெல்லு குத்த வாங்கடியோ

சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

பத்தோடு ஒண்ணு பலகாரம் பன்ன
சத்தாக மாவிடிங்க

ஓ ஒய்யா

கல்லோடு உமியும் சேராம பாத்து பக்குவமா இடிங்க
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
இதுதானே கல்யாண விருந்தென்று
ஊரே பாரட்ட வேணும்

சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

லல்லி லல்லி லாலி லல்லி லாலி லாலி லாலி லல்லி லாலி லல்லி
லல்லி லாலி லாலி லாலி லல்லி

மாப்பிள்ளை பொண்ணு மணவரை காண
போனாலே கோலமிடுங்க

ஓ ஒய்யா

மாவிலை தென்னை இளங்குருதாக
வீடெங்கும் ஆடவிடுங்க
வள்ளி மானக வரணும் மணபொண்ணு
தங்க வேலாக வரணும் மாப்பிள்ளை
வள்ளி மானக வரணும் மணபொண்ணு
தங்க வேலாக வரணும் மாப்பிள்ளை
இதுதானே கல்யாணமென்று
ஊரே பாரட்ட வேணும்

சுத்த மஞ்சள் பட்டுசேல கட்டதான் வேணும்
முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான் வேணும்

சுத்த மஞ்சள் பட்டுசேல கட்டதான் வேணும்
முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான் வேணும்

முல்லை வெள்ளி போல பொண்ணு மின்னதான் வேணும்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.