ஜலிதா வனிதா பாடல் வரிகள்

Movie Name
Avanthan Manithan (1975) (அவன்தான் மனிதன்)
Music
M. S. Viswanathan
Year
1975
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
ஜலிதா... வனிதா... ஓ மை டார்லிங்
ஜலிதா தும் ஃபாத்திமா

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

மௌனத்தின் மலர்ச் சோலை
மஞ்சத்தின் குளிர் காற்று
மாணிக்க மணிமாலை
மன்மதன் இசை பாட்டு
மௌனத்தின் மலர்ச் சோலை
மஞ்சத்தின் குளிர் காற்று
மாணிக்க மணிமாலை
மன்மதன் இசை பாட்டு
உருவத்தில் ஒன்றாகி நடை போட்டதோ
உள்ளங்களை எடை போட்டாதோ
உள்ளங்களை எடை போட்டாதோ

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

கார் முகில் குழல் ஆட
கை விரல் படம் போட
கண்மணி நடமாட உன் இடை பதம் பாட
கார் முகில் குழல் ஆட
கை விரல் படம் போட
கண்மணி நடமாட உன் இடை பதம் பாட
உலகத்தை விலை பேச சிலை வந்ததோ
ஊடலெனும் கலை வந்ததோ
ஊடலெனும் கலை வந்ததோ 

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு
இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு
ஓவிய சீமாட்டி உரு வந்ததோ
ஓசை தரும் மணி வந்ததோ
ஓசை தரும் மணி வந்ததோ

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.