ஒத்தகட ஒத்தகட பாடல் வரிகள்

Last Updated: Feb 07, 2023

Movie Name
Pandiya Naadu (2013) (பாண்டிய நாடு)
Music
D. Imman
Year
2013
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
ஒத்தகட ஒத்தகட மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்
அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்

ஜெயிச்சா ஜோடி வரும்
தோத்தா தாடி வரும்
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு
ஜெயிச்சா மாலை மாத்து
தோத்தா ஆள மாத்து
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்குக் கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்குக் கயிறு

ஒத்தகட ஒத்தகட மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்
பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்

கண்ண காட்டி வலை விரிக்கும்
கண்ண கட்டி கழுத்தறுக்கும்
மொத்த உறவு கூட்டி வந்து
மொத்த உறவை கொண்டுபுடும்
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு
செல் போனுக்கு செலவழித்து
செல்வம் எல்லாம் கறைச்சுபுடும்
அஞ்சு நிமிஷம் சுகம் கொடுத்து
ஆயுள் முழுக்க அழுக விடும்
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்குக் கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்குக் கயிறு

ஒத்தகட ஓததகட மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்
பிச்சுக்கிட்டு பிச்சுக்கிட்டு போனா
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்

ஹே ஒத்தகட ஒத்தகட மச்சான்
நான் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சேன்
ஓடிப் போன ஓடிப் போன பொண்ண
இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட வச்சேன்

ஜெயிச்சா இன்பம் வரும்
தோத்தா ஞானம் வரும்
இதான் மச்சான் லவ்வு
இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு
எலியும் புலி அடிக்கும்
புழுவும் படமெடுக்கும்
இதான் மச்சான் லவ்வு
இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு
நாறும் பூவாகும் டா
மச்சி மோரும் பீர் ஆகும் டா
வெறும் நாறும் பூவாகும் டா
மச்சி மோரும் பீர் ஆகும் டா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.