பொதிகை மலை சாரலிலே பாடல் வரிகள்

Movie Name
Kalyana Paravaigal (1988) (கல்யாணப்பறவைகள்)
Music
Rajan & Rajan
Year
1988
Singers
S. P. Sailaja
Lyrics
Vairamuthu
பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு
பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ
பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ ( 2 )

அருவியிலே நான் குளிக்க அருகினிலே நீயிருக்க
கார்க்குழலாள் கண்ணசைத்தால் உன் தேகம் பாய் விரிக்கும்
மாங்கனியில் சுவையிருக்க பூங்கொடியை நீயணைக்க
ஊர்வசியோ மேனகையோ யாருமில்லை எனக்கீடு

பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு
பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ
பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ

மைவிழிகள் தான் சிவக்க மயக்கத்திலே நான் மிதக்க
மன்மதனின் லீலைகளை மஞ்சத்திலே நான் படிக்க
பார்வையிலே ஆயிரந்தான் அர்த்தங்களை காணுகிறேன்
என்னோடு நீயிருந்தால் கனவுகளும் நிறைவேறும்

பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு
பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ
பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ...

பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு
பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ
பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ..ஓஓ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.