உழவா உழவா பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Bhoomi (2020) (பூமி)
Music
D. Imman
Year
2020
Singers
Sid Sriram, Yogi B
Lyrics
Madhan Karky
உழவா…..உழவா….
உலகை உழ வா
புதியதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா

உழவா உழவா உழவா….
உலகை உழ வா
புதியதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா எழு தலைவா

பாட்டனை பூட்டனை உனக்குள்ளே பூட்டிடு
மண்ணெணும் தாய் இவள் உயிரினை ஈட்டிடு
மரபனு யாவிழும் உழவென தீட்டிடுநாம்
இனி யார் என எதிரிக்கு காட்டிடு

விதை நெல்லாய் நீ உருமாற
அஞ்சாதே வா வா
வா வா
உரம் இங்கே நெஞ்சுரம் தானே
கை கோர்த்து வா வா
வா வா

உதிரத்தை நீரென பாய்ச்ச
என்னோடு வா வா
கம் வித் மீ
விரல் எல்லாம் ஏரென மாற
மண் மாற்ற வா வா

பிணியென பரவிடும் வளர்ச்சியை
உன் அறிவினில் அழிக்க வா
வா வா
புதிதொரு வயல்வெளி புரட்சியை
இந்த நொடியினில் தொடங்க வா…..

உழவா உழவா உழவா….
உலகை உழ வா
புதியதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா எழு தலைவா

உழவா உழவா உழவா….
உலகை உழ வா
இளைஞன் நினைத்தால் முடியும்
முடிவெடு தலைவா எடு தலைவா

ஆடியும் பாடியும் உழைத்திட்ட நம் இனம்
கணினியில் திரையினில் சிறை பட்டு கிடப்பதா
உழவனின் கட்டுடல் உழைத்திட கிடக்கையில்
விசை பொறி தரையினில் மனிதர்கள் நடப்பதா

ஓ உலகின் முதல் பேரறிவாளன்
நீதானே வா வா
கம் ஆன்
தரையில் கால் வைத்திடும் தேவதை
நீதானே வா வா
லெட்ஸ் கோ

ஐம்பூதம் உடன் வரும் தோழன்
நீதானே வா வா
நீதான்
பசி ஆற்றி மகிழ்கிற தாயும்
நீதானே வா வா

நரம்பினில் தெரிகிற பசுமையை
இந்த வயல்களில் இறக்க வா
நெழிந்திடும் புழுக்களின் சகதியில்
இளம் சரித்திரம் செதுக்க வா…..

உழவா உழவா உழவா….
உலகை உழ வா
புதியதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா எழு தலைவா

உழவா உழவா உழவா….
உலகை உழ வா…..
இளைஞன் நினைத்தால் முடியும்
முடிவெடு தலைவா எடு தலைவா

உழவு என்பது
ஒரு பொழுது போக்கு இல்லை
விளையும் பயிரும் உழவன் உயிரும்
உனக்கு ஆட்டமே

உனது அரசியல் எமக்கு தேவையில்ல
இளைஞர் உழுது இணையும் பொழுது
பெருகும் ஈட்டமே

ஆண்: இனி ஒரு உயிரும் வீணாய்
அழிந்திட விட மாட்டோம்
மருத்துவம் சட்டம் பொறியியல் போர்
உளவியல் தொழில் நுட்பமும் மாறும்

உடல் அழிக்கும் பாணம் விற்க்க
எங்கள் நீரை விற்றது யாரடா
புகை உமிழும் ஆலைக்காக
எங்கள் மண்ணை விற்ப்பதாரடா

இலவசம் மின்சாரம் வேண்டாம்
வேண்டாம்
ஒளியினில் மின்சாரம் காண்போம்
காண்போம்
கடன்களை நீ நீக்க வேண்டாம்
வேண்டாம்
உழைப்பினில் எல்லாமே தீர்ப்போம்
தீர்ப்போம்

வா வா மண்ணை ஆள உழவனே
வா வா உழவா
நீதான் உண்மை பச்சை தமிழனே
பச்சை தமிழா வா வா

நிலம் கிழித்திடும்
உந்தன் தோளின் ஏரோடு எதிரிகளின்
முகம் கிழித்திட ஒன்றாய் கூடி போராடு

உழவா உழவா உழவா….
உலகை உழ வா
புதியதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா எழு தலைவா

உழவா உழவா உழவா….
உலகை உழ வா
இளைஞன் நினைத்தால் முடியும்
முடிவெடு தலைவா எடு தலைவா

உழவா உழவா உழ வா
உலகை உழவா
புதிதாய் உலகை படைக்க
எழுந்திடு தலைவா எழு தலைவா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.