பூக்காமல் ஒதிய பாடல் வரிகள்

Movie Name
Vai Raja Vai (2014) (வை ராஜா வை)
Music
Yuvan Shankar Raja
Year
2014
Singers
Tanvi Shah, Yuvan Shankar Raja
Lyrics
Madhan Karky

பூக்கமழ் ஓதியர்
போது போக்கிய சேக்கையின்
விளை செருச் செருக்கும் சிந்தையர்

ஆக்கிய அமிழ்தென
அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா. மாந்தல் மேயினார்

பெண்ணை மானென்றெண்ணாதே
என்னை நிலவென்றெண்ணாதே - நீ
கண்ணை மூடித் திறக்கும் முன் உன்
இதயம் கொய்தால் கேட்காதே

போர்... உன் மேலே போர்....
இங்கே இன்று நான் தொடுத்தேன்!
பார்.... உன்னை வெல்ல
பொற்கின்னத்தில் தேன் குடித்தேன்!

மீன் உடை விசும்பினார் 
விஞ்சை நாட்டவர்
ஊன் உடை உடம்பினார் 
உருவம் ஒப்பிலார்

மான் உடை நோக்கினார் 
வாயில் மாந்தினார்
தேன் உடை மலரிடை
தேன் பெய்து என்னவே!

பெண்ணை கனியென்றெண்ணாதே
என்னை கிளியென்றெண்ணாதே - இக்
காமக் காட்டில் வேட்டையாடும்
புலியின் கண்ணைப் பார்க்காதே

போர்... உன் மேலே போர்....
இங்கே இன்று நான் தொடுத்தேன்!
பார்.... உன்னை வெல்ல
பொற்கின்னத்தில் தேன் குடித்தேன்!

தாமமும் நானமும் 
ததைந்த தண் அகில்
தூமம் உண் குழலியர்
உண்ட தூ நறை

ஓம வெங்குழி 
உகுநெய்யின் உள் உறை
காம வெங்கனலினை
கனற்றிக் காட்டிற்றே

தென்றல் காற்றென்றெண்ணாதே
உன் வேரைச் சாய்க்கும் காற்று இவள்
உன் மேலே ஏறி அழகாய் அமர்ந்து
உயிரைக் குடிக்கும் கழுகு இவள்

போர்... உன் மேலே போர்....
இங்கே இன்று நான் தொடுத்தேன்!
பார்.... உன்னை வெல்ல
பொற்கின்னத்தில் தேன் குடித்தேன்!

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.