கண்ணா நீ தூங்டா பாடல் வரிகள்

Movie Name
Baahubali 2 (2017) (பகுபலி 2)
Music
M. M. Keeravani
Year
2017
Singers
Nayana Nair
Lyrics
Madhan Karky
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
     
பூவையர் மீது கண் எய்வது முறையா     
பாவை என் நெஞ்சு தினம் தேய்கின்ற பிறையா     
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா     
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா     
     
உன் விரலினில் மலை சுமந்து போதுமே கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா     
உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே     
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா………     
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா     
     
கோபியர் குளிக்கையிலே உடைகள் திருடி களைத்தாய்     
போய்விடு மாயவனே
பானையில் வெண்ணையினை     
தினமும் திருடி இளைத்தாய்
தூங்கிடு தூயவனே     
சா…………………………மனா………     
மோ…………………………கனா………     
போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு     
வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு     
மார்பில் சாய்ந்து கண் மூடடா   

 (கண்ணா)
     
சோலையின் நடுவினிலே      
நுழைந்தேன் அலைந்தேன் தொலைந்தேன்     
தான் உனதருகினிலே  
கானகம்  நடுவினிலே
மயங்கி கிறங்கி கிடந்தேன்     
தான் உனதழகினிலே   
 
மா……………………தவா……………     
யா……………………தவா…………   

லீலை செய்தே என்னை நீ கவிழ்க்க     
காளை மோதி உன்னையும் கவிழ்க்க     
காயம் என்னால் கொண்டாயடா  

கண்ணா.....

முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா     

மதனா மதுசூதனா மனேகரா மனே..கரா 3

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.