வாராய் நீ வாராய் பாடல் வரிகள்

Movie Name
Bogan (2017) (போகன்)
Music
D. Imman
Year
2017
Singers
Shankar Mahadevan, Shreya Ghoshal
Lyrics
Madhan Karky
வாராய் ...
வாராய்  நீ  வாராய்
நீ  போகும்  இடம்  வெகு  தூரமில்லை
நீ  வாராய்
கூறாய்   நீ கூறாய்
என்  ரத்த  இதழ்  உன்  முத்த  கடல் என
கூறாய்

வாராய்  வாராய்  நீ  வாராய்
நீ  போகும்  இடம்  வெகு  தூரமில்லை
நீ வாராய்
கூறாய்  கூறாய்  நீ  கூறாய்
என்  ரத்த  இதழ்  உன்  முத்த  கடல்
என  கூறாய்
பஞ்சாக நீ  நெஞ்செல்லாம்  தீ
வேறென்ன  கேள்வி  பற்றி  கொள்ள  வா
ஜாமத்தில்  வான்  காமத்தில்  நான்
ஐயங்கள்  வீண்  சுற்றி  கொள்ள  வா

சிரிப்போ  உனது  இதழோ  எனது
உயிரோ  உனது  உடலோ  எனது
உனது  எனது
உனது  எனது
உனது  எனது

வாராய் ...
வாராய்  நீ  வாராய்
நீ  போகும்  இடம்  வெகு  தூரமில்லை
நீ  வாராய்

தாராய்  உனை தாராய்
நாம்  காத்திருக்க  இனி
நேரமில்லை  நீ  தாராய்

வாராய்  வாராய்  நீ  வாராய்
நீ  போகும்  இடம்  வெகு  தூரமில்லை
நீ வாராய்

தாராய்  தாராய் உனை  தாராய்
நாம்  காத்திருக்க  இனி
நேரமில்லை   நீ   தாராய்

கள்ளாக  நீ  உள்ளுக்குள்  தீ
ஏன்  இன்னும்  தாகம்  ஊற்றிகொள்ளட்டா
பஞ்சத்தில்   நான்  மஞ்சத்தில்  மான்
கொஞ்சல்கள்  வீண்  அள்ளி  தின்னட்டா

உடையோ  உனது  இடையோ  எனது
இதயம்  உனது  மார்போ   எனது
உனது  எனது  உனது  எனது ......

உன்  நெற்றியில்  தேனினை  ஊற்றி
உன்  பாதத்தில்  பருகட்டுமா
உன்  முதுகினில்  தீயினை  ஏற்றி
அதில்  மெழுகென   உருகட்டுமா

உன்  கிளர்ச்சி குவியமறிந்து
அதில்  கிளிகள்  பறக்க  விடவா
ஹே  நீ  உனை தீண்டா  இடத்தில்
நான்  நாவினில்  தீண்டிடவே

நீ  எந்தன்  சொந்தம்  இல்லை
மானே  மானே
ஆனாலும்  உந்தன்  மேலே  மோகம்  தானே
அன்பே  உன்  முகம்
என்  காதலனை  காட்டும்
ஆனால்  உன் நகம்  என்  காமுகனை   காட்டும்

வளையல்  உனது  கரங்கள்  எனது
அழகே
வளைவு  உனது  வரங்கள்    எனது
மலரே
ஓ ....கிளைகள்  எனது
கனிகள் உனது
வலி  எனது   பழி உனது
கிழி  உயிரே

வாராய்   வாராய்  நீ  வாராய்
நீ  போகும்  இடம்  வெகு  தூரமில்லை
நீ  வாராய்
தூராய் தூராய்  நீ  தூராய்
உன்  மோக  மழை  உன்  உற்ற  நிலை
நீ தூராய் 

பஞ்சாக நீ  நெஞ்செல்லாம்  தீ
கெஞ்சல்கள்  வேண்டாம்  பற்றி  கொள்ள   வா
பஞ்சத்தில்   நான்  மஞ்சத்தில்  மான்
கொஞ்சல்கள்  வீண்  அள்ளி  தின்னட்டா

சிரிப்போ  உனது  இதழோ  எனது
உயிரோ  உனது  உடலோ  எனது
உனது  எனது
உனது   எனது
உனது  எனது 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.