கூடு விட்டு கூடு பாஞ்சா பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Bogan (2017) (போகன்)
Music
D. Imman
Year
2017
Singers
Jyothi Nooran and Arvind Swamy
Lyrics
Madhan Karky
காதல்  என்பது  நேர ச்செலவு
காமம்  ஒன்றே  உண்மை  துறவு
நேசம்  பாசம்  போலி  உறவு
எல்லாம்  கடந்து  மண்ணில்  உளவு

யாருடன்  கழிந்தது  இரவு
என  ஞாபகம்  கொள்பவன்  மூடன்
அணியும்  நாற்றம்  கொண்டே
அவளின் பேரை  சொல்பவன்  போகன்

கூடு  விட்டு  கூடு  பாஞ்சா
மேனி  விட்டு  மேனி  மேஞ்சா
பின்னே  போகன்  எந்தன்  நெஞ்சின்  மேலே  சாஞ்சான்
பச்சை  திராச்சை தூறல்  மேலே
இச்சை  மூட்டம்  தீயோ  கீழே
என்னை  நட்ட  நடு  மையத்திலே சேர்த்தான்

மொத்த  பூமியின் மோகத்து ஜோதி
அது  போகன்  தின்ற  மீதி
நேரினில்  போகனை காண
அந்த  காமனும்  கொள்வான்  பீதி
விண்ணில்   மண்ணில்  எங்கெங்கும்  போகன்  வில்லா

தனி  ஒருவனுக்குள்ளே  உள்ளே
ஒரு  பிரபஞ்சமே  மறைந்திருக்கும்
இவன்  மனவெளி  ரகசியம்  அதை
நாசா   பேசாதா
கிரகங்களை   கை  பந்தாட
விரும்பிடுவானே
கருங்குழிக்குள்ளே  சென்று  திரும்பிடுவானே
புது புது புதையலை திறந்திடுவானே
முழுவதும் ருசித்ததும் பறந்திடுவானே

விண்ணில்   மண்ணில்  எங்கெங்கும்  போகன்  வில்லா

கூடு  விட்டு  கூடு  பாஞ்சா
மேனி  விட்டு  மேனி  மேஞ்சா
பின்னே  போகன்  எந்தன்  நெஞ்சின்  மேலே  சாஞ்சான்
பச்சை  திராச்சை தூறல்  மேலே
இச்சை  மூட்டும்  தீயோ  கீழே
என்னை  நட்ட  நடு  மையத்திலே சேர்த்தான்

மொத்த  பூமியின் மோகத்து ஜோதி
அது  போகன்  தின்ற  மீதி
நேரினில்  போகனை காண
அந்த  காமனும்  கொள்வான்  பீதி
விண்ணில்   மண்ணில்  எங்கெங்கும்  போகன்  வில்லா 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.