வாய மூடி சும்மா பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Mugamoodi (2012) (முகமூடி)
Music
K (Krishna Kumar)
Year
2012
Singers
Aalap Raju, Madhan Karky
Lyrics
Madhan Karky
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

#### நேற்று

கடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!

பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.

காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !

#### இன்று

பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?

#### நாளை

நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!

வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.