கடை கண்ணாலே ரசித்தேனே பாடல் வரிகள்

Movie Name
Bhoomi (2020) (பூமி)
Music
D. Imman
Year
2020
Singers
Varun Parandhaman, Shreya Ghoshal
Lyrics
Thamarai
அண்ணலும் நோக்கினான்….
அவளும் நோக்கினாள்….
பார்த்த நொடி யுகமாய் நீள
பதை பதைத்து கண் திறப்பேன்
பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று
கவண் வீசினால் கடை கண்ணாலே……

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே……
தொடரும் உன் ஞாபகம்
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

கண்ணாளனே…..கண்ணாளனே…..
உன்னிடமே……..என் மனமே……

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா…….

அண்ணலும் நோக்கினான்….
அவளும் நோக்கினாள்….ஆ…..

ஒளிந்தேன் மறைந்தேன்
எதை பார்த்தும்
நான் உனைச் சேர்ந்த பின்பு
பயம் நீங்கினேன்

படர்ந்தேன் அலைந்தேன்
கோடி போல நான்
மணி மார்பில் சாய்ந்து
மலர் சேர்க்கிறேன்

விழியை இமையை விரித்தேன்
உனை என் இளமையின்
அரண்மனை வரவேற்க்குதே

விரலை நகத்தை கடித்தே எழுதும்
கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே…..

இந்த நொடி போதும் தேனே
சிந்தி உரைந்தேனே நானே
உடலும் உயிரும் மெழுகாய் உருகும்

கண்ணாளனே…..கண்ணாளனே…..
உன்னிடமே……..என் மனமே……

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே……
தொடரும் உன் ஞாபகம்
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

கண்ணாளனே…..கண்ணாளனே…..
உன்னிடமே……..என் மனமே……

கடை கண்ணாலே ரசித்தேனே…..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.