வானம் பார்த்தே பாடல் வரிகள்

Movie Name
Kabali (2016) (கபாலி)
Music
Santhosh Narayanan
Year
2016
Singers
Pradeep Kumar
Lyrics
Kabilan

நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ
தீராத காயம் மனதில் உன்னாலடி ஆறாதடி
வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
 

ஏனோ இன்று தூரம் போனால்
இடப் பக்கம் துடித்திடும் இருதய இசை என
இருந்தவள் அவள் எங்கு போனாளோ
இரு விழி இமை சேராமல் உறங்கிட மடி கேட்கிறேன்
மழையினை கண் காணாமல்
மேகம் பார்த்து பூமி கேட்க நான் பாடினேன்
நீ இல்லா நானோ நிழலை தேடும் நிஜம் ஆனேனடி

வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
 

எங்கும் பார்த்தேன் உந்தன் பிம்பம்
கனவிலும் நினைவிலும் தினம் தினம் வருபவள்
எதிரினில் இனி வர நேராதோ

நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டிக் கொண்ட மீன் நானடி
ஏமாறும் காலம் இனி வேண்டாமடி கை சேரடி

வானம் பார்த்தே பழகிய விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.