ஆகாயம் தீ பிடிச்ச பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Madras (2014) (2014) (மெட்ராஸ்)
Music
Santhosh Narayanan
Year
2014
Singers
Pradeep Kumar
Lyrics
Kabilan
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா

ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல

கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு

வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான்
உன்ன விட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்

கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு

காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடி போனாலே
வேடந்தாங்கல் பறவைக்கு வேறு வேறு நாடு
உன்னுடையே கூடு நானடி
அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி

கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இபோ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு

ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீ பிடிச்ச நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோள காட்டு பாெம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல

கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இபோ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.