Chapter 54

பொச்சாவாமை

Pochchaavaamai

Unforgetfulness

10 kurals

Kural 531 இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
Worse than wrath in excess is Forgetfulness in joy-excess
Kural 532 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
Negligence kills renown just as Ceaseless want wisdom destroys
Kural 533 பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
Forgetful nature fails of fame All schools of thinkers say the same
Kural 534 அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
The fearful find no fortress here The forgetful find good never
Kural 535 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
Failing foresight the guardless man Shall rue his folly later on
Kural 536 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.
Forget none; watch with wakeful care Miss none; the gain is sans compare
Kural 537 அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
With cautious care pursue a thing Impossible there is nothing
Kural 538 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
Do what the wise commend as worth If not, for seven births no mirth
Kural 539 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
When joy deludes, their fate recall Whom negligence has made to fall
Kural 540 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
Easy it is a thing to get When the mind on it is set