Chapter 90

பெரியாரைப் பிழையாமை

Periyaaraip Pizhaiyaamai

Not Offending the Great

10 kurals

Kural 891 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
Not to spite the mighty ones Safest safeguard to living brings
Kural 892 பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
To walk unmindful of the great Shall great troubles ceaseless create
Kural 893 கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
Heed not and do, if ruin you want Offence against the mighty great
Kural 894 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
The weak who insult men of might Death with their own hands invite
Kural 895 யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
Where can they go and thrive where Pursued by powerful monarch's ire?
Kural 896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
One can escape in fire caught The great who offends escapes not
Kural 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
If holy mighty sages frown Stately gifts and stores who can own?
Kural 898 குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
When hill-like sages are held small The firm on earth lose home and all
Kural 899 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
Before the holy sage's rage Ev'n Indra's empire meets damage
Kural 900 இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
Even mighty aided men shall quail If the enraged holy seers will