போறாளே.. போறாளே.. பாடல் வரிகள்

Last Updated: Feb 01, 2023

Movie Name
Annakodiyum Kodiveeranum (2013) (அன்னக்கொடியும் கொடிவீரனும்)
Music
G. V. Prakash Kumar
Year
2013
Singers
Gangai Amaran, S.P.B. Charan
Lyrics
Gangai Amaran
ஆ: போறாளே.. போறாளே.. யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே
போறாலே... போறாலே...
யே கண்ணகட்டி காட்டுல விட்டு போறாலே

அடி ஒன்னுமே புரியல உலகமும் தெரியலயே
என் கண்ணெல்லாம் நீர் குடமாய் எதும் கனவும் முடியலயே
இது தான் யே போறப்பா இது தான் உன் பொறுப்பா
மனசே எரியுதம்மா எரிக்கும் சுடும் நெருப்பா

போறாலே... போறாலே...
யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே...

பெ: மனசார முகம்பாத்த மனசுகுள்ள வெத வெதச்சோ
அண போட முடியாம ஆசையெல்லாம் தெரந்துவச்சோ

ஆ: இந்த காடேல்லாம் மேடேல்லாம் கால்தடத்த பதிச்சுவெச்சு
கரட்டு வழி இருட்டு வழி கண்டபடி திருஞ்சு வந்தோம்

பெ: ஒரு ராத்திரியும் தூங்குனதா நமக்கு ஒரு கதையும் இல்ல
அட ராப்பகலும் தெரியவில்ல நமக்கது புதுசுமில்ல

ஆ: அதெல்லாம் பழைய கத அத நீ ஏன் மாரந்த
அலையா அலையுரேனே அடியே ஏன் பறந்தா

பெ: போனாலு போகலயே யேன் நெனப்பில் நீ தான்
நிழலும் நீ தான் மாரலயோ ஓ... ஓ...

ஆ: ஒரு நெடியும் ஒரு போழுதும் உன் நினைப்ப ஒழிச்சதில்ல
ஒரு யுகமா பல யுகமா ஒரவ அத்து தவிச்சதில்ல

பெ: இதில் யாரோட கண்ணும்பட்டு புரிஞ்சது நம்ம படி
இதில் விதியோட விளையாட்டா விழுந்தது பெரிய பழி

ஆ: யே வேதனைய எடுத்து சொன்னா வெயிலும் அழுகும்
அந்த சாமி இத கேட்டு சொன்னா உனக்கும் புரியுமடி

பெ: உசுரே நடுங்குதையா உன்ன நினைச்சபடி
இவ ஒன் அன்னக்கொடி போரா வேர வழி

ஆ: போறாலே... போறாலே...
யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே
போறாலே... போறாலே...
யே கண்ணகட்டி காட்டுல விட்டு போறாலே

பெ: அடி ஒன்னுமே புரியல உலகமும் சரியில்லயே
என் கண்ணெல்லாம் நீர் குடமாய் எதும் கனயும் முடியலயே
இது தான் யே போறப்பு இதுக்கு யார் பொறுப்பா
மனசே எரியுதையா என்ன சுத்தி சுடும் நெருப்பா

ஆ: போறாலே... போறாலே...
யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே... 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.