நில்லடி என்றது உள்மனது பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Kaalamellam Kaaththipaen (1997) (காலமெல்லாம் காத்திருப்பேன்)
Music
Deva
Year
1997
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Madhan Karky
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு

நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே

இரவெதற்கு

நில்லடி என்றது உள்மனது

சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்

நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்

கங்கைக் கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா

மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக

ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே

நில்லடி என்றது உள்மனது

செல்லடி என்றது

பெண்மனது
நில்லடி என்றது உள்மனது

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

ஆஆ ஆ ஆ

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தானா

வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்

மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்

கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத் தேட

ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே

நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு

இரவிலே அல்லியை அணைப்பதற்கு

நான் உன்னை அணைப்பேனே

இரவெதற்கு

நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.