குறும்பா ‍(அப்பா) பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Tik Tik Tik (2018) (டிக் டிக் டிக்)
Music
D. Imman
Year
2018
Singers
Sid Sriram
Lyrics
Madhan Karky
கையபுடிச்சா தாறுமாறு
கட்டி அணைச்சா தாறுமாறு
கொஞ்சம் சிரிச்சா தாறுமாறு
உன்னாலே பெண்ணே
என் மனசு சுக்கு நூறு

ஓக்கே ஓக்கே
இனி எல்லாம் ஓக்கே
லாக்கு லாக்கு
உன் கூட லாக்கு

ஆனேனே அழகியே
ஆனாலும் அழுகல
உன்னத்தான் மிஞ்ச இந்த
உலகத்தில் யாரும் இல்லை...

ல ல லவ்
ல ல லவ்
ல ல லவ்

நான்ஸ்டாப்பு காதலு
உயரம் குறைந்தேன் உன்னால்

மணலில் வரைந்தேன் உன்னால்
கடலில் கரைந்தேன் உன்னாலே
சிறகாய் விரிந்தேன் உன்னால்

திரையில் பறந்தேன் உன்னால்
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே
ஒற்றை கிரயான்

ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவாம்
உருளை சீவல்
பையை வெடித்து நொறுக்கிடுவாம்
நொறுக்கிடுவாம்!

குறும்பா ! என் உலகே நீதான் டா
குறும்பா ! என் உயிரே நீதான் டா
குறும்பா ! என் உலகே நீதான் டா
குறும்பா ! என் உயிரே நீதான் டா

விண்வெளி மீன்களில் எல்லாம்
உன் விழிதானே பார்ப்பேன்
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் !
வெற்றிகள் ஆயிரம் வந்தால்

புன்னகையோடு ஏற்பேன்
உன்னிடம் மட்டும்தானே தோற்பேன் !
ஆட்டம் ஆடும்போதெல்லாம்
உலகே அழகாய் மாறும்

வீட்டுப் பாடம் செய்தலா
ரத்த அழுத்தம் ஏறும்
உந்தன் குறும்பு மரபணு
எவ்வழி கண்டாய் ?
எனக்குத் தெரியாதா ?

குறும்பா ! என் உலகே நீதான் டா
குறும்பா ! என் உயிரே நீதான் டா
குறும்பா ! என் உலகே நீதான் டா
குறும்பா ! என் உயிரே நீதான் டா

உளறல் மொழிகள் உன்னால்
கார்ட்டூன் கனவும் உன்னால்
கிறுக்காய் ஆனேன் உன்னாலே
எறும்போடு எறும்பாய் சில நாள்
போனாய் நாயாய் சில நாள்

மனிதன் ஆனேன் உன்னாலே
விந்தை என்று கையில் வந்தாயே
என் மனம் குளிர
தந்தை என்று பட்டம் தந்தாயே

நான் தலை நிமிர
தலை நிமிர

குறும்பா ! என் உலகே நீதான் டா
குறும்பா ! என் உயிரே நீதான் டா
குறும்பா ! என் உலகே நீதான் டா
குறும்பா ! என் உயிரே நீதான் டா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.