காற்று வெளியிடை பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Kappalottiya Thamizhan (1961) (கப்பலோட்டிய தமிழன்)
Music
G. Ramanathan
Year
1961
Singers
P. B. Srinivas, P. Susheela
Lyrics
Bharathiar
காற்று வெளியிடை கண்ணம்மா கண்ணம்மா
ஹா …
காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும் இதழ்களும்
ஹா …
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூரி ததும்பும் விழிகளும்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூரி ததும்பும் விழிகளும்
பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும் ஆ…
பத்து மாற்று பொன்னொத்த நின் மேனியும்
இந்த வையத்தில் யாவுள மட்டிலும்
எனை வேற்று நினைவின்றி பேசியே
இங்கோர் விண்ணவனாக புரியுமே
எனை வேற்று நினைவின்றி பேசியே
இங்கோர் விண்ணவனாக புரியுமே
இந்த காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ஆ….
நீ எனதின்னுயிர் கண்ணம்மா
எந்த நேரமும் நிந்தனை போற்றுவேன்
நீ எனதின்னுயிர் கண்ணம்மா
துயர் போயின போயின துன்பங்கள்
நினை பொன் என்று கொண்ட பொழுதிலே
துயர் போயின போயின துன்பங்கள்
நினை பொன் என்று கொண்ட பொழுதிலே
எந்தன் வாயினிலே அமுதூறுதே
கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே
கண்ணம்மா கண்ணம்மா கன்னம்மாவென்ற பேர் சொல்லும் போதிலே
எந்தன் வாயினிலே அமுதூறுதே
உயிர் தீயினிலே வளர் ஜோதியே
எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே
இந்த காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.