தண்ணீர் விட்டோம் பாடல் வரிகள்

Movie Name
Kappalottiya Thamizhan (1961) (கப்பலோட்டிய தமிழன்)
Music
G. Ramanathan
Year
1961
Singers
Tiruchi Loganathan
Lyrics
Bharathiar
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ
கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ

தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்

எண்ணமெல்லாம் மெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடிய திருவுளமோ
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியை தோற்போமோ
மாதரையும் மக்களையும் வந்கன்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி
இரு கண்ணற்ற சேய்போல் கலங்குவதும் காண்கிலையோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.