நாளும் நாளும் ‍ பாடல் வரிகள்

Movie Name
60 Vayathu Maaniram (2018) (60 வயது மந்திரம்)
Music
Ilaiyaraaja
Year
2018
Singers
Benny Dayal, Monali Thakur
Lyrics
Vivek (lyricist)
ஆண் : நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
வாரம் மாதம்
குழு : ஓ….ஓ…
ஆண் : வருடம் ஆகும்
குழு : ஓ….ஓ…

பெண் : இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்….
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே

ஆண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
ஆண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…

குழு : ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா
ஷான நான னா னா

பெண் : புல் மனதின் உள்ளே
துள்ளி ஏறும் காலை போல
பல எண்ணம்
மூடி வைத்த உண்மை
என்ன வென்று அந்த
முத்து கண்கள் சொல்லும்

ஆண் : சொல்லிவிட
வேண்டும் என்று
எண்ணி வரும் போது
சொற்கள் என்னை கட்டிபோடுதே
சொல்ல சொல்ல ஒத்திகையில்
பக்கம் நின்ற வார்த்தை
அந்தரத்தில் விட்டு போகுதே

பெண் : பேசாத நம் உணர்வெல்லாம்
மொழி இங்கு சொல்லாது
திருமணங்கள் இணைந்தாலே
பாலங்கள் வராது

ஆண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
ஆண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…

ஆண் : நெஞ்சங்கள் இரண்டு
தேடி தேடி
தன்னை தொலைத்ததும் என்ன
கண் இமைகள் மூட
அந்த உலகினில் கண்ட
கனவு என்ன

பெண் : தன்னிடத்தில் துளிகளை
தேங்கி வைத்த மேகம்
எந்த நொடி மழை தருமோ
தொட்டு தொட்டு கிளைகளில்
பட்டு வரும் காற்று
எந்த நொடி பூவை தொடுமோ

ஆண் : நதி போகும் திசையோடு
சிறு ஓடம் செல்லாதோ
பயணங்கள் இது என்ன
கடலோடும் தொடராதோ

ஆண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
பெண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…
ஆண் : வாரம் மாதம்
குழு : ஓ….ஓ…
பெண் : வருடம் ஆகும்
குழு : ஓ….ஓ..

ஆண் : இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
பெண் : மண் மலர்ந்த
பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்….
ஆண் : என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே

பெண் : நாளும் நாளும்
குழு : ஓ….ஓ…
ஆண் : சேர்ந்தால் தானே
குழு : ஓ….ஓ…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.