தேடி தேடி ஓடும் கால்கள் பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
60 Vayathu Maaniram (2018) (60 வயது மந்திரம்)
Music
Ilaiyaraaja
Year
2018
Singers
Benny Dayal
Lyrics
Palani Barathi
பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
ஆண் : தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ

பெண் : விண்ணை தேடி
போகும் மேகம்
மண்ணை தேடி சிந்தும் வண்ணம்
புதிரல்லவா….

ஆண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடி தேடி……..

பெண் : தேடாமல் இங்கே ஏதும்
வாழ்க்கை ஒன்றும் இல்லை
தேடாமல் தேட தானே
வந்தோம் நாம்

ஆண் : பூமிக்குள் நீரைத் தேடி
ஓடும் வேரை போலே
ஏதேதோ பாதை மாறி
சென்றோம் நாம்

பெண் : யாரை தேடி இங்கு
யாரோ யாரோ
வீசும் காற்று அதை கூறாதோ
ஆண் : பூவின் கூட்டம் சொல்லும்
ஆரி ராரோ
தேடும் இன்பம் இன்னும் கூடாதோ

பெண் : வானில் உள்ள வண்ணம்
ஏழும் போதாதே
தேடல்கள் தீராதே…

ஆண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
பெண் : தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ

ஆண் : பூக்கள் மேல் ஓடி ஓடி
தேடி வந்த காற்று
வாசத்தின் வார்த்தை
ஒன்றை சொல்லாதோ

பெண் : எங்கேயோ மூங்கில் காட்டில்
கேட்க்கும் அந்த பாட்டு
என் நெஞ்சின் தேடல்
என்ன சொல்லாதோ

ஆண் : கூண்டுக்குள்ளே வாழும்
நத்தை நெஞ்சம்
தேடல் கொண்டால்
விண்ணை தாண்டாதோ

பெண் : சூரக் காற்றில்
சுற்றி விழும் பூக்கள்
நேசம் கொண்டு கைகள் தாங்காதோ

ஆண் : தேடல் கொண்ட நெஞ்சம்
என்றும் ஓயாதே
தேடல்கள் தீராதே

பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
ஆண் : தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ

பெண் : விண்ணை தேடி
போகும் மேகம்
மண்ணை தேடி சிந்தும் வண்ணம்
புதிரல்லவா…

பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடி தேடி…..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.