மான் குட்டியே பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Priyamaana Thozhi (2003) (பிரியமான தோழி)
Music
S. A. Rajkumar
Year
2003
Singers
Hariharan, Sadhana Sargam, Sujatha Mohan
Lyrics
Pa. Vijay
மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
உம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
ஒன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
ஏம் மனசுல தெருக்கூத்து
உன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
என் நெஞ்சில புயல் காத்து

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
எம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

ம் ம்...ம் ம் ம்...ம் ம் ம்...ம் ம்...
ம் ம்...ம் ம் ம்...ம் ம் ம்...ம்ம்ம்...
ம் ம்...ம் ம் ம்...ம் ம் ம்...ம் ம்...
ம் ம்...ம் ம் ம்...ம் ம் ம்...ம்ம்ம்...

உன்னால உன்னால ஏம் மனசு ஒன்னால
தறியில் ஓடும் நாடா போல ஏன் ஓடுது
அது ஏன் ஓடுது

உன்னால உன்னால ஒன்னோட நெனப்பால
கண்ணுக்குள்ள மெளகா வத்தல் ஏன் காயுது 
அது ஏன் காயுது

இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி
மேல வந்து ஏன் விழுந்தே

நீ செக்கச் செக்க செவந்த குங்குமத்த கலந்த
வண்ணத்துல ஏன் பொறந்தே

நீயும் நானும் தான் ஒண்ணா திரியிறோம்

தீயே இல்லையே ஆனா எரியிறோம்

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே

உம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

சங்குச் சக்கு சங்குச் சக்கு செய்யச் செய்யா
ரெய்ரெ ரெய்ரெ ரெரெ ரெரெ ரெரெ ரெரெ ரெரெ
சங்குச் சக்கு சங்குச் சக்கு செய்யச் செய்யா
ரெய்ரெ ரெய்ரெ ரெரெ ரெரெ ரெரெ ரெரெ ரெரெ

உன்னோடும் என்னோடும் உடம்போடு வேர்த்தாலும்
வேர்த்திடாத எடமும் உண்டு நீ சொல்லனும்
அத நீ சொல்லனும்

ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத எடம் என்ன
ஒதட்டு மேல வேர்க்காதய்யா நீ நம்பனும்
அத நீ நம்பனும்

நீ அங்கக் கொஞ்சம் காட்டி இங்கக் கொஞ்சம் பூட்டி
பாதி உயிர் எடுக்காதே

என்ன கட்டிக் கட்டிப் புடிக்க கண்ட இடம் கடிக்க 
உத்தரவு கேட்க்காதே

அசந்தா போதுமே அரிச்சு பார்க்கலாம்

கசந்தா போய்விடும் கலந்தே பார்க்கலாம்

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
ஒம் மனசுல தெருக்கூத்து
என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
ஒன் நெஞ்சில புயல் காத்து

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
உம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.