எந்த தேசத்தில் பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Priyamaana Thozhi (2003) (பிரியமான தோழி)
Music
S. A. Rajkumar
Year
2003
Singers
Hariharan
Lyrics
Pa. Vijay
எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா

எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
அட நீ இன்றி நான் அழகா

ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில்
ஏனோ எடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில்
நீ கால் முளைத்த புஷ்பம்
கடல் நுரையில் செய்த சிற்பம்
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம்

எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா

வண்ண வண்ண பூவெல்லாம் வாசம் வீசி பூ பூக்கும்
உன்னை போல ஒன்றுக்கும் வாசம் வீச தெரியாதே
கோடி கோடி வார்த்தைகள் கோர்த்து கொண்டு வந்தாலும்
நீ சினுங்கும் ஓசை போல் அர்த்தம் எதிலும் கிடையாதே
ஓ… அழகே நீ வாய் பேச
கீதம் என்றேனே சங்கீதம் என்றேனே
பேசாத மௌனத்தை கவிதை என்பேனே
புது கவிதை என்பேனே
கடல் ஓரம் நீயும் வந்தால்
புயல் வந்ததென்று அர்த்தம்
நீ என்னை நீங்கி சென்றால்
உயிர் நின்றதென்று அர்த்தம்

எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா

உந்தன் கண்கள் ஓரத்தில் தீட்டி வைத்த மை தந்தால்
ஐந்து அல்ல ஐநூறு காப்பியங்கள் உண்டாகும்
உந்தன் கூந்தல் ஈரத்தை தொட்டு போன காற்றை தான்
கொஞ்ச நேரம் சுவாசித்தால் எந்தன் வாழ்வின் வரமாகும்
ஓ… அன்பே உன் இதழை தான் சிறைகள் என்பேனே
கனி சிறைகள் என்பேனே
மெலிதான இடையை தான் பிறைகள் என்பேனே
தேய் பிறைகள் என்பேனே
அடி அன்ன பறவை ஒன்று
அன்று வாழ்ந்ததாக கேட்டேன்
நான் கேட்ட அந்த ஒன்றை
இன்று கண்களாலே பார்த்தேன்

எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
அட நீ இன்றி நான் அழகா

ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில்
ஏனோ எடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில்
நீ கால் முளைத்த புஷ்பம்
கடல் நுரையில் செய்த சிற்பம்
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.