சொல்லிவிடு சொல்லிவிடு பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Kaaviya Thalaivan (2014) (காவிய தலைவன்)
Music
A. R. Rahman
Year
2014
Singers
Mukesh
Lyrics
Pa. Vijay
சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு
சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு இந்த யுத்தம் போதும் சென்றுவிடு
இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை முதலில் நீயே கொன்றுவிடு
கண்ணா என்னை முதலில் கொன்றுவிடு

ஏன் அம்பை எந்த வைத்தாய்
ஏன் குருதியில் நீந்த வைத்தாய்
ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்
ஏன் உள்ளுக்குள் தோற்க்கடித்தாய்
உலகத்தை வெல்ல வைத்தாய் உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய்
காண்டீபன் கேட்கிறேன் கண்ணா காண்டீபன் கேட்கிறேன்
சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆ… காலச்சக்கரம் உன் கையில் அதில் சுற்றியதேனோ நான்
விதியும் சதியும் உன் கண்ணில் அதில் சிக்கியதேனோ நான்
கர்ணனை கொன்ற பாவம் கண்ணனுக்கு போகுமென்றால்
கண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகும் ஐயோ
சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஓ… உலகமே யுத்தம் எதற்கு
ஓ… உயிர்களே ரத்தம் எதற்கு
ஓ… இறைவனே துயரம் எதற்கு
ஓ… இதயமே வன்மம் எதற்கு

கண்ணா தேரை நிறுத்து
எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ தேரை நிறுத்து
போதும் இந்த குருதிக்குளியல் போரை நிறுத்து
நாளை உலகம் நலம் பேரும் என்று போரை நிறுத்து போரை நிறுத்து

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.