யாருமில்லா பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Kaaviya Thalaivan (2014) (காவிய தலைவன்)
Music
A. R. Rahman
Year
2014
Singers
Srinivas, Swetha Mohan
Lyrics
Pa. Vijay
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்

ஆ…
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில் …
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே …
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில் …

பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே நீயே
மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.