ஒரு பாதி கதவு பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Thandavam (2012) (தாண்டவம்)
Music
G. V. Prakash Kumar
Year
2012
Singers
Haricharan, Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
ஆ: நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம் தானடி... ஈ...

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

பெ: ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
(நீ என்பதே)

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

ஆ: இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்

பெ: ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்

ஆ: இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது

பெ: வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

ஆ: ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்

பெ: ஓ... இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்

ஆ: இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே

பெ: இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

பெ: ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
(நீ என்பதே)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.