இறைவா என் இறைவா பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Velaikkaran (2017) (வேலைக்காரன்)
Music
Anirudh Ravichander
Year
2017
Singers
Anirudh Ravichander
Lyrics
Viveka
இறைவா என் இறைவா
எனை தேடி என் மனம்
போர்க்களம் ஆனதே.

இறைவா என் இறைவா
எந்தன் இரு கால்களை
பாதையே மேயுதே.

எனை படைத்தவன்
நீ தான் ஐயா.

உயிர் வளர்த்ததும்
நீ தான் ஐயா.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தால் தாங்காது ஐயா.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தால் தாங்காது ஐயா.

நான் வாழவா
நான் வீழவா
என் செய்வது நீ சொல்லப்பா.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தால் தாங்காது ஐயா.

நான் வாழவா
நான் வீழவா
என் செய்வது நீ சொல்லப்பா.

வா வா வா...
வா வா வா...
வா வா வா...
வா வா வா இறைவா

வா வா வா...
வா வா வா...
வா வா வா...
வா வா வா...

உயிரே என் உறவே
உனை விட்டு போவதும் சாவதும் ஒன்றுதான்.

இரவே என் பகலே
இனி வரும் நாளெல்லாம் உன் விழி முன்புதான்.

பிரிவென்னும் துயர் தீண்டாமலே
துணை இருந்திடும் என் காதலே
இலக்கணம் ஏதும் பாராமலே
அடைக்கலம் நான் உன் மார்பிலே.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

காடு மலை தாண்டலாம்
கால்கள் ரணமாகலாம்.

தூய பெரும் காதலின்
ஆழம் வரை போகலாம்.

நான் விரும்பி அடையும்
பொன் சிறையே சிறையே.

நீ விரும்பி அணிய
நான் சிறகே சிறகே.

ஓ நிரந்தரம் என ஏதும் இல்லை
நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை.

இருந்திடும் வரை போராடலாம்
எரிமலையிலும் நீராடலாம்.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

வா வா வா...
வா வா வா...
வா வா வா...
வா வா வா இறைவா

உயிர் விடும் வரை
உனை விட்டால் உடல்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.