சூறாவளிடா நாங்க பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Marudhu (2016) (மருது)
Music
D. Imman
Year
2016
Singers
Jinesh Prabhu
Lyrics
Yugabharathi
சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

புழுதி உடம்போட
ஆடுமடா காலு எழுதி மாளாது
எங்க வரலாறு

வாளெடுத்து
வகுடெடுத்து சீவும் சீமைடா
எங்க தெக்குத்திசை காரனுக்கு
புல்லும் வாளுடா

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது  (2)

சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

காட்டுப் பனைமரமா
கருப்பா உடம்பிருக்கும் ஆனாலும்
எங்க மனம் வெள்ள வெள்ள

மூட்டை முதுகிலதான்
நிதமும் சுமந்திடுவோம் ஆனாலும்
பாரம் எங்க நெஞ்சில் இல்லை

காய்ச்சி போன எங்க
கையிலதான் ரேகை இல்ல
ஆனாலும் கவலையில்லை

நாங்க நெத்தியில
பூசுகிற மண்ணைவிட
திருநீறு ஒசந்ததில்ல

தலைமேல கனத்தத்தான்
ஏத்திவைப்போம் ஆனா தலைக்குள்ள
கனத்தத்தான் ஏத்தமாட்டோம்

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது  (2)

சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

ஜல்லிக்கட்டு காளை
இது தாக்குமடி ஆள
வெட்டி வம்பு செஞ்சா
இவன் கட்ட வைப்பான் சேலை

மத்தாப்பூ பூப்போல
பொங்கி சிாிப்பானே
கித்தாப்பூ காட்டாம
கொட்டி கொடுப்பானே

நனைஞ்ச பனைபோல
வளத்திதான் நல்ல மனசு
மலைபோல உசத்திதான்

சட்டையில அழுக்கிருக்கும்
சவுடாலு நிறைஞ்சிருக்கும்
ஆனாலும் நாங்க ரொம்ப
கெத்து கெத்து

வோவை வெளிச்சத்துல
இருட்ட துரத்திடுவோம்
மாறாத அன்பு எங்க
சொத்து சொத்து

சும்மா சண்டித்தனம்
பண்ணிவரும் சல்லிப்பையன்
குதிகாலு நரம்பெடுப்போம்

ஊரு பொண்ணுங்கள
கேவலமா சொன்னவன
பொலி போட்டு வகுந்துருவோம்

ஆதாரம் அம்மன்னு
ஆசை வைப்போம்
அவ காப்பாத்தும் சாமின்னு
பூசை வைப்போம்

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது  (2)

நிமிர்ந்து நின்ன கருது
கருது கருது
நேர்மையின்னா மருது
மருது மருது

நிமிர்ந்து நின்ன கருது
நேர்மையின்னா மருது

சூறாவளிடா