கொட்டுங்கடி கும்மி பாடல் வரிகள்

Movie Name
Suriyan (1992) (சூரியன்)
Music
Deva
Year
1992
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
பெண் : கொட்டுங்கடி கும்மி
கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

பெண்குழு : கொட்டுங்கடி கும்மி
கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

பெண் : தாழங்குடை போல் நடக்கும்
தாமரைப்பூ தாயானா
தன் மடியில் தேன் சுமக்கும்
குறிஞ்சி மலர் போலானா
குங்குமம் பொங்கிடும்
மங்கள மங்கையரே
உங்க கை வளைக் கொஞ்சிட

பெண்குழு : கொட்டுங்கடி கும்மி
கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

***

பெண் : அரைச்சு வச்ச சந்தனத்த
எடுத்துப் பூசுங்க
மயில் இறகினாலே
வேர்த்திடாம விசிறி வீசுங்க

பெண்குழு : தொடுத்து வச்ச பாசி மாலை
கழுத்தில் மாட்டுங்க
வாழைத் தண்டு போல
இருக்கும் கையில்
வளையல் பூட்டுங்க

ஆண் : கட்டழகும் எட்டழகும்
கண்ணு படும் கண்டாலே
கன்னத்துல திருஷ்டி பொட்டு
வைக்க வேணும் முன்னால

பெண்குழு : இவ மூக்கும் முழியும்
பார்க்க பார்க்க
மின்னும் ஆனிப் பொன்போலே

பெண் : கொட்டுங்கடி கும்மி
கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

***

பெண்குழு : லா ல லா லல்லால லா
லா ல லா லல்லால லா
லா லலலா லா லலலா
லா லலலா லா லலலா

பெண் : சிவப்புக் கல்லு மாணிக்கம் போல்
புள்ளப் பொறக்கணும்
அது சூர்யகாந்தி பூவைப் போல
மெல்ல சிரிக்கணும்

பெண்குழு : பொறந்தப் புள்ள அருவிப் போல
தாவிக் குதிக்கணும்
இவ புடவத் தனத்தில்
மூடிக்கிட்டு பாலும் குடுக்கணும்

ஆண் : தங்கக் கட்டி வயித்தில் வந்த
தலைச்சன் பிள்ளே எந்நாளும்
சிங்கக் குட்டி போல் நடந்து
போடும் இங்கு கும்மாளம்

பெண்குழு : அடி ஆக மொத்தம்
நமக்கு நித்தம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

பெண் : கொட்டுங்கடி கும்மி
கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

பெண்குழு : கொட்டுங்கடி கும்மி
கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

ஆண் : தாழங்குடை போல் நடக்கும்
தாமரைப்பூ தாயானா
தன் மடியில் தேன் சுமக்கும்
குறிஞ்சி மலர் போலானா
குங்குமம் பொங்கிடும்
மங்கள மங்கையரே
உங்க கை வளைக் கொஞ்சிட

பெண்குழு : கொட்டுங்கடி கும்மி
கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.