கீர வாங்கலையோ கீரை பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Unnai Naan Vazhthugiren (1989) (உன்னை நான் வாழ்த்துகிறேன்)
Music
Vijay Chithar
Year
1989
Singers
R. S. Swarnalatha
Lyrics
Unknown
கீர வாங்கலையோ கீரை
இது பொன்னாங்கண்ணி கீர பூச்சியில்லா கீர
புதுசா வந்தக் கீர இது கீழக்கர கீரை

தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர
சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க
கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க

அரக்கீர வேணுமின்னா அம்பது காசுங்க
சிறுக்கீர எல்லாம் இங்கே சில்லற தானுங்க
அரக்கீர வேணுமின்னா அம்பது காசுங்க
சிறுக்கீர எல்லாம் இங்கே சில்லற தானுங்க

தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர
சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க
கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க

எத்தனையோ வகை வகையாய் இருக்குதுங்க கீரங்க
என்னா கீர வேணுமின்னு எடுத்து கொஞ்சம் பாருங்க
அட எத்தனையோ வகை வகையாய் இருக்குதுங்க கீரங்க
என்னா கீர வேணுமின்னு எடுத்து கொஞ்சம் பாருங்க

மொளக்கீர முழுசுக்கும் மூணு ரூபா தானுங்க
பத்துக் காசு தந்தாக்க ஒரு பிடி தாங்க
அட மொளக்கீர முழுசுக்கும் மூணு ரூபா தானுங்க
பத்துக் காசு தந்தாக்க ஒரு பிடி தாங்க

அட தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர
சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க
அட கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க

பல்லு போன பாட்டிக்குத்தான் பதமான கீரங்க
பொக்க வாயி தாத்தா கூட பாத்து தின்னும் கீரங்க
அட பல்லு போன பாட்டிக்குத்தான் பதமான கீரங்க
பொக்க வாயி தாத்தா கூட பாத்து தின்னும் கீரங்க

கீரையின்னா கீரைங்க எல்லாத்துக்கும் ஜோருங்க
காசை இங்கே கொடுத்துப்புட்டு கொத்து கொத்தா அள்ளுங்க
கீரையின்னா கீரைங்க எல்லாத்துக்கும் ஜோருங்க
காசை இங்கே கொடுத்துப்புட்டு கொத்து கொத்தா அள்ளுங்க

அட தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர
சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க
அட கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க
லலலலலா லலல்லா லாலலாலாலா....இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.