விழியில் வழியும் துளி பாடல் வரிகள்

Movie Name
Unnai Naan Vazhthugiren (1989) (உன்னை நான் வாழ்த்துகிறேன்)
Music
Vijay Chithar
Year
1989
Singers
R. S. Swarnalatha
Lyrics
Unknown
விழியில் வழியும் துளி நீர்
சொல்லும் கதையல்லவோ
பெண்ணின் மனதின் சுமை
ஒரு கோடி துயர் அல்லவோ
சுமை ஒரு கோடி துயரல்லவோ...

தெய்வத்தின் கோயில் பூஜைக்குத்தானே
பூத்ததிந்த ரோஜாப்பூ
தெருவினில் விழுந்து புழுதியில் கலந்து
போனது யார் செய்த பொல்லாப்பு ( 2 )

பெண்ணாய் பிறந்தால் வேதனைதானே
வாழ்க்கை கனவானதே
பெண்ணாய் பிறந்தால் வேதனைதானே
வாழ்க்கை கனவானதே

நெஞ்சின் சுமையை அவள்
யாரிடம் சொல்லி அழுவாள்
அவள் யாரிடம் சொல்லி அழுவாள்

விழியில் வழியும் துளி நீர்
சொல்லும் கதையல்லவோ
பெண்ணின் மனதின் சுமை
ஒரு கோடி துயர் அல்லவோ
சுமை ஒரு கோடி துயரல்லவோ...

புள்ளி மானாய் பொன் இளம் கன்றாய்
துள்ளி வந்தாளம்மா..ஆஆஆ...
இன்று புலியிடம் தன்னை பலியென தந்து
உறவினைக் கண்டாளம்மா ( 2 )

நினைவில் வந்த நிம்மதி எங்கே
தேடிச் சென்றாளம்மா
நினைவில் வந்த நிம்மதி எங்கே
தேடிச் சென்றாளம்மா

உயிரில் கலந்த அவள் தெய்வத்தை காண்பாளோ
காதல் தெய்வத்தை காண்பாளோ

விழியில் வழியும் துளி நீர்
சொல்லும் கதையல்லவோ
பெண்ணின் மனதின் சுமை
ஒரு கோடி துயர் அல்லவோ
சுமை ஒரு கோடி துயரல்லவோ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.