போக்கிரிப் பயலே பாடல் வரிகள்

Movie Name
Thai Ullam (1952) (தாய் உள்ளம்)
Music
Chittor V. Nagaiah
Year
1952
Singers
Jayalakshmi
Lyrics
Kanakasurabhi

போக்கிரிப் பயலே – உன்னைத்
தூக்கவே மாட்டேன் – நீ
பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன்
போக்கிரிப் பயலே......

தொட்டிலைக் கண்டாச் சிணுங்கிடுறே
தோளிலே சாஞ்சி ஓறங்கிடுறே
எட்டி நகர்ந்தா எழுந்திடுறே
இடுப்பிலே சவாரி ஏறித் திரியிறே....(போக்கிரி)

கரும்பில் இருந்து சுவை பிரிந்தாலும்
கன்றுந் தாயும் இணை பிரியாது – என்
கண்ணும் மணியைப் பிரிந்துறங்காது
செல்லக்கிளியே என் வல்லமையெல்லாம்
உன்னிடம் செல்லாதுடா கிட்டே நில்லாதுடா..(போக்கிரி)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.