தெரியாத தென்றல் பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Kamali from Nadukkaveri (2021) (கமலி நடுக்காவேரி)
Music
Dheenadhayalan
Year
2021
Singers
Akshaya Sivakumar
Lyrics
Madhan Karky
தெரியாத தென்றல்
என்னைத் தழுவுது ஏனோ?
புரியாத பூக்கள்
என்னுள் திறக்குதுதானோ?

துணையாக நீ என்
கூட நடதிடும் போது
வழியாவும் எந்தன்
நாணம் உதிர்த்துடுவேனோ?

விழுந்தேன் பிடித்தாய்
அழுதேன் சிரித்தாய்
எரிந்தேன் அணைத்தாய்
என் தாயின் புன்னகையாய்

இசையாய் இதயம்
வரியாய் உலகம்
முடிவிலி நடனமாய்!
 
தோழன் என்று சொல்லிப் பார்த்தேன்
காவல் என்றும் சொல்லிப் பார்த்தேன்
இன்னும் நூறு பட்டம் தந்தேன்
போதவில்லையே!

அந்தச் ஒற்றை செல்லச் சொல்லைச்
வீரமங்கை நானும் அல்ல
நீயே அதைச் சொன்னால் அழகு

மிதவை நிலவாய்
சிதறும் ஒளியாய்
அதிலே கனவாய் நீயே!

உறவின் புதிரோ?
திறவா முகையோ?
அவை தானாய் அவிழ்ந்தால்தான் அழகு

இன்முகம் மென்குரல்
வெண்மொழி என இழுக்கிறாய்

எனை உன் வசம்
நீ ஈர்த்துக் கொள்கின்றாய்

என் நிழல் உன் நிழல்
ஒட்டிக் கொண்டே கொண்டாடும்
முடிவிலி நடனமாய்!
முடிவிலி நடனமாய்!
 
பாடம் என உந்தன் பார்வையெனில்
நாள் முழுதும் படிப்பேன்
பானம் என உன்தன் வார்த்தையெனில்
கோப்பையாய் மனம்

வேறெதுவும் கேட்கவில்லை
காலம் ஓடவில்லை
யாரும் பேசவில்லை
வாசம் ஏதுமில்லை
காற்றும் வீசவில்லை
மூச்சும் தேவையில்லை
உடன் உடன் உடன் உடன் நீ இருக்கையிலே
கோவில் போகவில்லை
போகத் தோன்றவில்லை
என்னைக் காணவில்லை
உன்னை உன்னை உன்னை
அருகில் அருகில் நான் கண்டு
உருகி உருகி நான் உண்டு
வாழ்ந்தாலே போதாதா என்ன தொல்லை?
 
ஆயிரம் வானமாய் மாறினாயே!
நான் எதில் ஏறிட? கூறுவாயா?
ஆயிரம் மேகமாய் தூறினாயே!
காதலாய் என்னிலே வீழுவாயா

விழுந்தேன் பிடித்தாய்
அழுதேன் சிரித்தாய்
எரிந்தேன் அணைத்தாய்
என் தாயின் புன்னகையாய்

இசையாய் இதயம்
வரியாய் உலகம்
முடிவிலி நடனமாய்!
முடிவிலி நடனமாய்!

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.