எல்லேலாமா ஏலே பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
7aam Arivu (2011) (ஏழாம் அறிவு)
Music
Harris Jayaraj
Year
2011
Singers
Karthik, Shruti Haasan, Vijay Prakash
Lyrics
Na. Muthukumar
எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா...
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா...
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க..
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க...
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க...

எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா..
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா..
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே
இவன் பார்வை பட்டு தெறிக்க...
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க..
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

அடி நியூட்டன் ஆப்பிள் விழ, புவி ஈர்ப்பை கண்டானடி!
இன்று நானோ உன்னில் விழ , விழி ஈர்ப்பை கண்டேனடி!
ஓசை கேட்காமலே , இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே , எனை காதல் செய் நண்பனே

உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே!
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே,
மேலும் மேலும் அழகாய் மாறி போனனேன் நானே...

எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா?
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
சந்தோஷமா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே..
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே...
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க..

சிறு வேரும் இல்லாமலே..
துளி நீரும் இல்லாமலே...
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்..
தோளில் விழாமலே..
கை சிறிதும் படாமலே..
உன் நிழலும் தொடாமலே..
நீ என்னை கொள்ளை இட்டாய்..
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா?
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா?
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா..வா..

எல்லே லாமா ஏலே ஏலமா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா?
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா?
என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.